
மனிதநேய விருது
சமூக பணியில் ஈடுபட்ட ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில், 2025ம் ஆண்டுக்கான மனிதநேய விருது வழங்கப்படவுள்ளது.
நிஜமாக்கும் கனவுகள்
படிப்பை தவிர வேறு பொறுப்புகள் ஏதும் இன்றி நண்பர்களுடன் ஆடி, பாடி ஓடிய கல்லுாரி காலத்தின் முக்கிய தருணம் பட்டமளிப்பு விழா. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோருக்குமான கனவு நாள் என்றே கூறவேண்டும். கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா நிகழ்வு கல்லுாரி அரங்கில் நடைபெறவுள்ளது. பெற்றோரின் பல கனவுகள் நிஜமாகும் நன்னாள் இது.
தொழில் வாய்ப்புகள்
பத்திரபதிவுத்துறையின் கீழ் உள்ள தொழில் வாய்ப்புகளான முத்திரைத்தாள் முகவர் மற்றும் பத்திர எழுத்தாளர் குறித்த வழிகாட்டுதல் நிகழ்வு அச்சிவர்ஸ் கிளப் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயதுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயிற்சி பெறலாம். அனுமதி இலவசம். பயிற்சி குறித்து அறிந்துகொள்ள 7397506684 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
மாதிரி வீடும் அறிவியல் உண்மையும்
இந்திய தரநிர்ணய அமைப்பு மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், நுகர்வோர் உரிமைகள் தினத்தில், ' மாதிரி வீடு ' என்ற அறிவியல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில், வீட்டு உபயோக பொருட்களில் உள்ள தரநிலைகள், அறிவியல் செயல்பாடுகளை அறியும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். நம் வீடுகளில் உள்ள குக்கர், மிக்சி போன்ற அனைத்து பொருட்களும் தரமானது தானா என்பதை எளிதாக அறிந்தும், அடிப்படையும் புரிந்து கொள்ள சரியான வாய்ப்பு.