/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல...அனுபவம்!' 'கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல...அனுபவம்!'
'கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல...அனுபவம்!'
'கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல...அனுபவம்!'
'கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல...அனுபவம்!'
ADDED : ஜூலை 26, 2024 11:34 PM

கோவை:போகிற போக்கில் கண்ணதாசன் சொன்னதெல்லாம் கற்பனை மட்டுமல்ல, அதில் அனுபவம் நிறைந்திருக்கிறது, என கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.
கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா இணைந்த வழங்கும் 'கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024, கோவை கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
கண்காட்சியில் நேற்று, கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமண்டபம் நடந்தது. 'கவியரசு கண்ணதாசன் படைப்புகளிலும், பாடல்களிலும் பெரிதும் ஓங்கி இருப்பது அற்புத கற்பனையே, அனுபவ முத்திரையே' என்ற தலைப்பில் நடந்தது.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா நடுவராக இருந்தார். அவர் பேசுகையில், எவ்வளவு பெரிய அவையாக இருந்தாலும், எவ்வளவு பேர் நிறைந்திருந்தாலும் கண்ணதாசன் தான் சொல்ல வந்த கவிதைகளை, கருத்துக்களை சுருக்கமாகவும், அர்த்தமாகவும் சொல்வதில் வல்லவர்.
போகிற போக்கில் சொல்லி விட்டு செல்கிறார் என நினைக்கிறோம். அதை ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அனுபவமும் இருக்கும்; கற்பனையும் இருக்கும், என்றார்.
'அற்புத கற்பனையே' எந்த தலைப்பில், விஜய சுந்தரி, சிவகுருநாதன், சிவ நந்தினி ஆகியோர் பேசினர்.
'அனுபவம் முத்திரையே ' என்ற தலைப்பில் பாரதி, மனோன்மணி, சிவசக்தி வடிவேல் ஆகியோர் பேசினர்.
புத்தக கண்காட்சியில் இன்று
இன்று 'தொழிலுக்கு வந்தனை' என்ற தலைப்பில், தொழிலாளர்களுக்கான பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4:30 மணிக்கு சிறப்பு சிந்தனை அரங்கம் நடக்கிறது. உடல், மனம், உயர்வு, என்ற தலைப்பில் வரதராஜன் பேசுகிறார்.
'மனமே, என் உடலே' என்ற தலைப்பில், கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகிறார். 'உயர உயர பற' என்ற தலைப்பில், ரூட்ஸ் இயக்குனர் கவிதாசன் பேசுகிறார். 'உடலோடு உரையாடு' என்ற தலைப்பில், டாக்டர் பால வெங்கடசுப்பிரமணியன் பேசுகிறார்.
மாலை 6:30 மணிக்கு, தொழிலாளர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மிருதங்கம், இசை, பரதநாட்டியம், கரகாட்டம், நடனம், பன்முக நடனம் உற்சாகப் பாடல்கள், நாடகம் சிலம்பாட்டம், மெல்லிசை பாடல்கள் மற்றும் மைம் காட்சிகள் நடக்கின்றன.