/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை அறிவியல் பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம் கால்நடை அறிவியல் பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
கால்நடை அறிவியல் பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
கால்நடை அறிவியல் பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
கால்நடை அறிவியல் பல்கலை மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 05, 2024 08:38 PM
உடுமலை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.,யில், 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து, இணைய தளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விபரங்களை, http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்; வரும், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில்சமர்ப்பித்த விண்ணப்பங்களை, தபால்வாயிலாக அனுப்ப தேவையில்லை. 'மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.