/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செவ்வாழை சாகுபடிக்கு ஆர்வம்; வருஷநாட்டு ரகத்துக்கு கிராக்கி செவ்வாழை சாகுபடிக்கு ஆர்வம்; வருஷநாட்டு ரகத்துக்கு கிராக்கி
செவ்வாழை சாகுபடிக்கு ஆர்வம்; வருஷநாட்டு ரகத்துக்கு கிராக்கி
செவ்வாழை சாகுபடிக்கு ஆர்வம்; வருஷநாட்டு ரகத்துக்கு கிராக்கி
செவ்வாழை சாகுபடிக்கு ஆர்வம்; வருஷநாட்டு ரகத்துக்கு கிராக்கி
ADDED : ஜூன் 05, 2024 08:38 PM
உடுமலை : உடுமலை ஏழு குள பாசனம் உள்ளிட்ட நீர் வளம் மிகுந்த பகுதிகளில், தென்னைக்கு ஊடுபயிராக வாழை சாகுபடி செய்கின்றனர். இதில், செவ்வாழை ரகத்துக்கு, அதிக வரவேற்பு உள்ளது. முன்பு, நேந்திரன் மற்றும் இலைத்தேவைக்கான வாழை ரகங்களே உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக இருந்தது.
தற்போது, பிற ரகங்களையும் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு, கிராக்கி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், செவ்வாழை ரகங்களுக்கான கன்றுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே, விவசாயிகள் தேவையறிந்து, பிற மாவட்டங்களில் இருந்து, கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
அதில், தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியிலிருந்து செவ்வாழை கன்றுகள் கொண்டு வந்து, ஒரு கன்று, 120 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'அதிக நீர் தேவையுள்ள வாழை சாகுபடியை, பலர் தேர்வு செய்துள்ளனர். சீசனுக்கேற்ப, தோட்டக்கலை பண்ணை வாயிலாக, வாழைக்கன்று உற்பத்தி செய்து, மானிய விலையில், விற்பனை செய்யலாம். இதனால், அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள். செவ்வாழை சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.