/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருவமழை பொழிவை எதிர்நோக்கும் விவசாயிகள் பருவமழை பொழிவை எதிர்நோக்கும் விவசாயிகள்
பருவமழை பொழிவை எதிர்நோக்கும் விவசாயிகள்
பருவமழை பொழிவை எதிர்நோக்கும் விவசாயிகள்
பருவமழை பொழிவை எதிர்நோக்கும் விவசாயிகள்
ADDED : ஜூன் 05, 2024 08:38 PM
பொள்ளாச்சி : 'விவசாயத்துக்கு கை கொடுக்கும் வகையில், தென் மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்குமா,' என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பல லட்சம் ெஹக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி உள்ளது. சில பகுதிகளில், வாழை, நிலக்கடலை, காய்கறிகள், சிறு தானியம் உள்ளிட்டவையும் பயிரிடப்படுகின்றன.
பெரும்பாலான விவசாய நிலங்கள், பி.ஏ.பி., பாசன திட்டங்களை நம்பியே உள்ளன. கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் போனது, திருமூர்த்தி, ஆழியாறு பாசன நீர் சரிவர கிடைக்காதது, நிலத்தடி நீர்மட்டம் சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பயிர் சாகுபடி பாதித்துள்ளது.
தற்போது, கேரளாவில், தென்மேற்கு பருவமழையும் துவங்கி உள்ளது. அதன் தாக்கம் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அதிகரிக்கும் என்பதால், விவசாயம் செழிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஆரம்ப கட்ட விவசாய பணிகள் தொடங்கியும், மழை பொய்த்துப் போனதால், விவசாயிகளுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்துள்ளோம். போதிய அளவு பருவமழை பெய்தால் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைக்கும்' என்றனர்.