/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க இரு நாட்கள் பயிற்சி சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க இரு நாட்கள் பயிற்சி
சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க இரு நாட்கள் பயிற்சி
சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க இரு நாட்கள் பயிற்சி
சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க இரு நாட்கள் பயிற்சி
ADDED : ஜூன் 12, 2024 12:12 AM
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நாளை, 13ம் தேதி முதல் இரு நாட்கள் நடத்தப்படவுள்ளது.
சிறுதானியங்களில் ஊட்டச்சத்துக்குள் நிறைந்துள்ளதால், இந்த உணவுப்பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதனால், வேளாண் பல்கலை சார்பில், சிறுதானியங்களை பயன்படுத்தி மதிப்பூட்டப்பட்ட, பாரம்பரிய உணவுகள், அடுமனைப் பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், நாளை, 13ம் தேதி முதல் இரு நாட்கள், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடத்தப்படவுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு, 94885 -18268, 0422--6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.