ADDED : ஜூன் 12, 2024 12:12 AM
பொள்ளாச்சி;திருநங்கைகளுக்கு சமூக பாதுகாப்பு உறுதிசெய்யும் வகையில், அவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்,கோவைமாவட்ட சமூகநலத்துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், ஆதாரில் திருத்தம் செய்தல், மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்கப்படுகிறது.
தகுதியான திருநங்கைகள், உரிய ஆவணங்களுடன்கோவைகலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில், பங்கேற்று பயன்பெறலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.