Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மருதுாருக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை'

'மருதுாருக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை'

'மருதுாருக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை'

'மருதுாருக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை'

ADDED : ஜூன் 23, 2024 10:46 PM


Google News
மேட்டுப்பாளையம்:மருதூர் ஊராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது, என ஜமாபந்தியில் மருதூர் ஊராட்சி தலைவர் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா, ஜமாபந்தி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மருதூர் ஊராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கோவை செல்லும் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில், இதனை வழங்க வேண்டும்.

கட்டாஞ்சி மலை பகுதியில் பல வருடங்களாக வசிக்கும் 26 மலைவாழ் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பகுதி நேர ரேஷன் கடையை, ராம் நகர் மற்றும் செல்லப்பனூர் பகுதிகளுக்கு அமைத்து தர வேண்டும்.

மருதூர் ஊராட்சியில் பால் கூட்டுறவுச் சங்க கட்டடம் மருதூர், கே.புங் புங்கம்பாளையம் மற்றும் ஜோதிபுரம் பகுதியில் அமைக்க வேண்டும். ஊராட்சியில் பல ஆண்டுகளாக ஊர் நத்த பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். 15க்கும் மேற்பட்ட குட்டைகளை தூர்வார வேண்டும்.

குருந்தமலை பிரிவு தெற்கு கன்னிமார் கோயில் அருகில் புதிய குட்டை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us