/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமர் கவுரவ நிதி பெற ஆவணம் சமர்ப்பிக்க அறிவுரை பிரதமர் கவுரவ நிதி பெற ஆவணம் சமர்ப்பிக்க அறிவுரை
பிரதமர் கவுரவ நிதி பெற ஆவணம் சமர்ப்பிக்க அறிவுரை
பிரதமர் கவுரவ நிதி பெற ஆவணம் சமர்ப்பிக்க அறிவுரை
பிரதமர் கவுரவ நிதி பெற ஆவணம் சமர்ப்பிக்க அறிவுரை
ADDED : ஜூன் 23, 2024 10:46 PM
சூலுார்;கடந்த, 2018 முதல் பி.எம்., கிசான் எனும் பிரதமரின் கவுரவ நிதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு, 6 ஆயிரம் ரூபாய், மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, இதுவரை, 17 தவணைகளுக்கான நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மட்டும், 6 ஆயிரத்து, 882 விவசாயிகள், பிரதமரின் கவுரவ நிதியால் பயன்பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,' 18 வது தவணைத்தொகை பெற, விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை, சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் தமிழ் நிலம் இணைய தளத்துடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே பயனாளிகள் தங்கள் நில ஆவண நகல்களை சுல்தான்பேட்டை வட்டார அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்' என்றனர்.