/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதி முடிந்த வடிகால் பணி : மருதுார் மக்கள் அவதி பாதி முடிந்த வடிகால் பணி : மருதுார் மக்கள் அவதி
பாதி முடிந்த வடிகால் பணி : மருதுார் மக்கள் அவதி
பாதி முடிந்த வடிகால் பணி : மருதுார் மக்கள் அவதி
பாதி முடிந்த வடிகால் பணி : மருதுார் மக்கள் அவதி
ADDED : ஜூன் 18, 2024 10:41 PM

மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியம் மருதுார் ஊராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகர், எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பணி முழுமை பெறாமல் உள்ளது.
வடிகால் வேறு ஒரு வடிகாலிலோ அல்லது அருகில் உள்ள பள்ளத்திலோ சென்று சேராமல் எஸ்.எம்.நகர் பகுதியின் திறந்த வெளியில் தண்ணீர் வெளியேறும் படி அமைந்துள்ளது. மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் திறந்தவெளியில் வந்து சேர்வதால், காலி இடங்களில் செடிகள், மரங்கள் முளைத்து, புதர் போல் காணப்படுகிறது. இதனால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு விஷப்பூச்சிகள் தினமும் படையெடுத்து வருகிறது, கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மகாலட்சுமி நகர், எஸ்.எம்., நகர் பகுதிகளின் வடிகால் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே பணியை முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. நீண்ட நாட்களாக இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.