/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்தையாறு உயர்மட்ட பாலம் பணியை வேகப்படுத்த கோரிக்கை காந்தையாறு உயர்மட்ட பாலம் பணியை வேகப்படுத்த கோரிக்கை
காந்தையாறு உயர்மட்ட பாலம் பணியை வேகப்படுத்த கோரிக்கை
காந்தையாறு உயர்மட்ட பாலம் பணியை வேகப்படுத்த கோரிக்கை
காந்தையாறு உயர்மட்ட பாலம் பணியை வேகப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2024 10:41 PM

மேட்டுப்பாளையம்;காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாறு ஓடுகிறது. காந்தையாற்றின் குறுக்கே 15.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு பக்கம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன. உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட உள்ளன. இதில் நான்கு தூண்க கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆற்றின் மையப்பகுதியில் ஒரு தூண் அமைக்க பேஸ் மட்டம் கான்கிரீட் போட்டு, கம்பி கட்டப்பட்டுள்ளது. குறைவான ஆட்கள் வைத்து வேலை செய்வதால், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து லிங்காபுரம் விவசாயிகள் மற்றும் காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறியதாவது:
காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் துவக்கி, ஒன்றரை ஆண்டாகிறது. தற்போது வரை பாதி அளவு பணிகள் கூட நடைபெறவில்லை. பாலத்தின் இரண்டு பக்கம், தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.
அதன் மீது கைப்பிடி சுவர் அமைக்க கம்பிகள் கட்டி, இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது. மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்துள்ளதால், அனைத்து கம்பிகளும் துருப்பிடித்து உள்ளது. இதை பயன்படுத்தினால், பணிகள் தரமாக இருக்காது.
எனவே மாவட்ட நிர்வாகம், உயர் அதிகாரிகளை கொண்டு, பாலம் கட்ட தரமான கம்பிகள், பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் அதிகமான இயந்திரங்களையும், வேலை ஆட்களையும் வைத்து பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.