/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உபகரணங்கள் உடைந்து... புதர் பெருகி வீணாகிறது முத்தண்ணன் குளத்தின் பூங்கா! உபகரணங்கள் உடைந்து... புதர் பெருகி வீணாகிறது முத்தண்ணன் குளத்தின் பூங்கா!
உபகரணங்கள் உடைந்து... புதர் பெருகி வீணாகிறது முத்தண்ணன் குளத்தின் பூங்கா!
உபகரணங்கள் உடைந்து... புதர் பெருகி வீணாகிறது முத்தண்ணன் குளத்தின் பூங்கா!
உபகரணங்கள் உடைந்து... புதர் பெருகி வீணாகிறது முத்தண்ணன் குளத்தின் பூங்கா!
ADDED : ஜூன் 24, 2024 01:12 AM

கோவை;தடாகம் ரோட்டில் உள்ள குமாரசாமி குளம் எனப்படும் முத்தண்ணன் குளத்தில் உள்ள பூங்காவில், பார்த்தீனிய செடிகள் மண்டிக் கிடக்கின்றன. பெரியவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. அவை முற்றிலும் பாழாவதற்குள் பராமரிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முத்தண்ணன் குளத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 31.6 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்குள்ள பூங்கா மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டு, ஓராண்டுதான் ஆகியிருக்கிறது.
உபகரணங்கள் உடைப்பு
அதற்குள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள, பல உபகரணங்கள் உடையத் தொடங்கி இருக்கின்றன. பெரியவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கால்களுக்கான பயிற்சி உபகரணம் உடைந்துள்ளதால், யாரும் பயன்படுத்த முடியாத வகையில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
சைக்கிளிங் உபகரணத்தில், பெடல்கள் தனியே கழன்று விட்டன. பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் குழந்தைகளுக்கானவை.
மிக சொற்பமான அளவில்தான், பெரியவர்களுக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவையும் உடைந்து கிடப்பதால், அவற்றைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
புதரும் மாடுகளும்
பூங்காவுக்குள் புதர் மண்டத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகளை பார்த்தீனியம் செடி ஆக்கிரமித்துள்ளது.
பூங்கா அருகிலுள்ள குடியிருப்பில் இருந்து, மாடுகள் அடிக்கடி பூங்காவுக்குள் வந்து துவம்சம் செய்து விடுகின்றன. குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் உள்ள மணல் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், புதர் மற்றும் களைச் செடிகளை அகற்றாவிட்டால், அவை பெரிய புதராக வளர்ந்து, பூங்காவையே சீரழித்து விடும்.
இக்குறைகளை நிவர்த்தி செய்து, உடனடியாக பூங்காவை மீட்டெடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.