/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஜூன் 24, 2024 01:11 AM

கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'அகம் மலர்தல்' எனும், ஆன்மிக சொற்பொழிவு ராம் நகர் ராமர் கோவிலில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில், ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீ கிருஷ்ணா பேசுகையில், ''லவுகீகம் மற்றும் ஆன்மிகம் இரண்டும் சேர்ந்ததே வாழ்க்கை. வாழ்வதற்கான உரிமையில் இந்த பூமியில் பிறக்கும் போதே, ஆன்மிகம் மற்றும் லவுகீகம் இரண்டும் வந்து விட்டது.
ஆன்மிகத்தில் ஆழமாக செல்லும் போது, அது நம் குடும்பத்திலும் எதிரொலிக்கும். அக்சர மணமாலை நமது மனதிற்கும், புத்திக்கும், அகங்காரத்திற்கும், ஆத்மாவிற்கும் நடுவில் பாலமாக அமைகிறது. மனிதர்கள் அனைவரும், 'நான் யார் விசாரம்' செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்