/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற 9ம் தேதி வரை கால அவகாசம் ஆக்கிரமிப்புகளை அகற்ற 9ம் தேதி வரை கால அவகாசம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற 9ம் தேதி வரை கால அவகாசம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற 9ம் தேதி வரை கால அவகாசம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற 9ம் தேதி வரை கால அவகாசம்
ADDED : ஜூலை 05, 2024 01:55 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பராமரிப்பிலுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 181-ல் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முதல் ஓடந்துறை பஞ்சாயத்து எல்லை வரை, தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலைப் பகுதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொது மக்களுக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் சாலையின் இருபுற ஓரங்களிலும் ஆக்கிரமிப்பாளர்களால், நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, தற்காலிகக் கூரை, சாலைத் திட்டுகள், விளம்பரப் பலகைகள் போன்ற ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பலமுறை அறிவிப்புகள் செய்யப்பட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், காலம் தாழ்த்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை தவறும்பட்சத்தில் வரும் 9ம் தேதி அன்று இத்துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும்போது ஏற்படும் பொருள் சேதத்திற்கு நெடுஞ்சாலைத் துறை எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவினத்திற்கு ஆக்கிரமிப்பாளர்களே பொறுப்பு. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.