/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரு வழித்தட ரயில்பாதை அமைக்க வலியுறுத்தல் இரு வழித்தட ரயில்பாதை அமைக்க வலியுறுத்தல்
இரு வழித்தட ரயில்பாதை அமைக்க வலியுறுத்தல்
இரு வழித்தட ரயில்பாதை அமைக்க வலியுறுத்தல்
இரு வழித்தட ரயில்பாதை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2024 01:59 AM
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - போத்தனூர் பகுதியில் இருந்து, கோவை செல்பவர்கள் பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் தினமும் நான்கு முறை ரயில் இரு மார்க்கமாக சென்று வருகிறது. வார இறுதி நாட்களில் கூடுதலாக, இரு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இரு வழித்தட ரயில் பாதை அமைக்க வேண்டும், என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரயில் சேவையை மேம்படுத்த இந்த இரு வழித்தடத்தின் வாயிலாக, பொள்ளாச்சி - கோவை மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் என சுழற்சி முறையில் ரயில் இயக்கலாம்.
இவ்வாறு ரயில் இயக்கப்பட்டால் அதிகப்படியான நபர்கள் ரயிலில் பயணிக்கக்கூடும். எனவே, ரயில்வே துறை சார்பில் இரு வழித்தடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.