/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை அறிவது அவசியம் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை அறிவது அவசியம்
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை அறிவது அவசியம்
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை அறிவது அவசியம்
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை அறிவது அவசியம்
ADDED : ஜூலை 05, 2024 02:00 AM
'ஒருவர் சரியான உடல் எடையோடு, ஆரோக்கியமாக இருப்பதாக கருதினாலும்கூட, தனக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை உள்ளதா என, பரிசோதித்துக் கொள்வது அவசியம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவஞானம்.
அவர் கூறியதாவது:
கே.எம்.சி.எச்., சார்பில், சமீபத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களின் அளவுக்கு, ப்ரீ - டயாபெடிக் எனப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலும் மக்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதில் பலருக்கு எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தெரிவார்கள். பரிசோதனை வாயிலாகத்தான் இதை கண்டறிய முடியும். இந்த நிலையில் கவனமாக இருப்பது அவசியம். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி, மருத்துவரின் பரிந்துரையுடன் ஆரோக்கியமான செயல்பாடுகளை பின்பற்றி, சர்க்கரை நோய் வரும் சூழலை தவிர்க்கலாம்.
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகளும் இந்நிலையில் இருப்போருக்கும் வரவாய்ப்புண்டு. இருதய நோய், மாரடைப்புக்கான சூழலும் உள்ளது.
ஒருவர் சரியான உடல் பருமனோடு, கச்சிதமான உடல்வாகுடன் ஆரோக்கியமாக இருப்பதாக கருதினாலும் கூட, தனக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஏனெனில், இந்த கட்டத்தில் இருந்து ஆரோக்கிய உடல் நிலைக்கு திரும்ப முடியும்; சர்க்கரை நோய் வந்துவிட்டால், அப்படி மீள முடியாது.
கே.எம்.சி.எச்.,ல் சர்க்கரை நோய் பரிசோதனைக்கு அதிநவீன வசதிகள், உபகரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய் தொடர்புடைய அனைத்து சிறப்பு மருத்துவத்துறைகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.