/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிரவையாதினத்தில் 30ம் ஆண்டு குருபூஜை ஐம்பெரும் விழாவுடன் இன்று நடக்கிறது சிரவையாதினத்தில் 30ம் ஆண்டு குருபூஜை ஐம்பெரும் விழாவுடன் இன்று நடக்கிறது
சிரவையாதினத்தில் 30ம் ஆண்டு குருபூஜை ஐம்பெரும் விழாவுடன் இன்று நடக்கிறது
சிரவையாதினத்தில் 30ம் ஆண்டு குருபூஜை ஐம்பெரும் விழாவுடன் இன்று நடக்கிறது
சிரவையாதினத்தில் 30ம் ஆண்டு குருபூஜை ஐம்பெரும் விழாவுடன் இன்று நடக்கிறது
ADDED : ஜூன் 11, 2024 07:48 PM
கோவை:கோவை, சிரவையாதினம் கவுமார மடாலயத்தில், 30ம் ஆண்டு குருபூஜை விழா உட்பட ஐம்பெரும் விழா இன்று நடக்கிறது.
கவுமார மடாலயம் மூன்றாவது குருமகா சன்னிதானம், கஜபூஜை சுந்தர சுவாமிகள் 30ம் ஆண்டு குருபூஜை விழா, அறக்கட்டளை சொற்பொழிவு, புலவர் புராணம் 5ம் பதிப்பு அறிமுக விழா, நுால் வெளியீடு, சான்றோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய, ஐம்பெரும் விழா இன்று நடக்கிறது.
காலை 9:00 மணி முதல் விழா துவங்குகிறது. சின்னசாமிக் கவுண்டர் நினைவு அறக்கட்டளை சார்பில், 'வண்ணச் சரபரின் புலவர் புராணத்தில் முருகன் அடியார்கள்' என்ற தலைப்பில், ஆய்வுரை நடக்கிறது. புலவர் புராணத்தில் முருகனடியார்கள் மற்றும் கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு மூன்றாம் தொகுதி நுால்கள் வெளியிடப்படுகின்றன.
நிகழ்வுகளில், முன்னாள் கல்லுாரிக் கல்வி இயக்குனர் குமாரசாமி, சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், திருவாமத்துார் கவுமார மடாலய மடாதிபதி தண்டபாணி சுவாமிகள், தாமரை பிரதர்ஸ் மீடியா நிர்வாக இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழநியாதினம் சாது சண்முக அடிகளார், கோவிலுார் ஆதினம் நாராயண ஞான தேசிக சுவாமிகள், திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.