/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்களுக்கு அரசு பணியாளருக்கு இணையான சம்பளம் 'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்களுக்கு அரசு பணியாளருக்கு இணையான சம்பளம்
'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்களுக்கு அரசு பணியாளருக்கு இணையான சம்பளம்
'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்களுக்கு அரசு பணியாளருக்கு இணையான சம்பளம்
'டாஸ்மாக்' மதுக்கடை பணியாளர்களுக்கு அரசு பணியாளருக்கு இணையான சம்பளம்
ADDED : மார் 11, 2025 11:48 PM
கோவை; தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கோவை விளாங்குறிச்சியில் நடந்தது. மாநில சிறப்பு தலைவர் பாரதி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசுப்பணியாளருக்கு இணையான சம்பளம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, இ.எஸ்.ஐ.,திட்டம், ஓய்வு வயது 60 ஆக அறிவித்தல், பணியின் போது இறந்த வாரிசுகளுக்கு பணி, பணிவிதிகள், ஏ.பி.சி.,பணிசுழற்சி முறை, பணிநிரவல் உள்ளிட்டவற்றை, அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் ஏப்.,10ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் எண்ணிக்கையை தீவிரப்படுத்துதல், மாதாந்திர சங்க கூட்டம் நடத்துதல், இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு பணப்பலன்களை விரைவில் கிடைக்க செய்தல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பணியாளர்களை, 90 நாட்களுக்குள் பிழைப்பூதியத்துடன் கூடிய மீள்ப்பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், திரளான டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்றனர்.