Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில மின்னொளி கூடைப்பந்து போட்டி; 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி., அணி

மாநில மின்னொளி கூடைப்பந்து போட்டி; 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி., அணி

மாநில மின்னொளி கூடைப்பந்து போட்டி; 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி., அணி

மாநில மின்னொளி கூடைப்பந்து போட்டி; 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி., அணி

ADDED : மார் 11, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
கோவை; கிருஷ்ணா கல்லுாரியில் நடந்த மாநில மின்னொளி கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி 'டிராபி'யை வென்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில், மாநில அளவில் ஆண்களுக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டி, இரு நாட்கள் நடந்தது. நான்காவது முறையாக நடக்கும் இந்த 'டிராபி போட்டியில், தமிழகத்தில் சிறந்த, 10 அணிகள் பங்கேற்றன.

'நாக்-அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டிகள் நடந்தன. லீக் சுற்றில், ஈரோடு கொங்கு இன்ஜி., கல்லுாரி அணி, மாருதி உடற்கல்வியியல் கல்லுாரியை, 87-65 என்ற புள்ளிகளிலும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, 56-18 என்ற புள்ளிகளில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியையும் வென்றன.

எஸ்.என்.எஸ்., அணி, 71-69 என்ற புள்ளிகளில், மாருதி கல்லுாரி அணியையும், பி.எஸ்.ஜி., அணி, 41-22 என்ற புள்ளிகளில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அணியையும், எஸ்.என்.எஸ்., அணி, 71-69 என்ற புள்ளிகளில் கொங்கு இன்ஜி., கல்லுாரியையும், பி.எஸ்.ஜி., அணி, 40-19 என்ற புள்ளிகளில் மாருதி கல்லுாரி அணியையும், வெற்றி கொண்டன.

'லீக்' நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முதல் பரிசையும், எஸ்.என்.எஸ்., கல்லுாரி இரண்டாம் பரிசையும், கொங்கு இன்ஜி., கல்லுாரி மூன்றாம் பரிசையும், மாருதி கல்லுாரி அணி நான்காம் பரிசையும் தட்டிசென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை, கிருஷ்ணா கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us