ADDED : மார் 11, 2025 11:45 PM
கோவில்பாளையம்; ஆசை காட்டி வரவழைத்து பணம் பறித்த கும்பலில் ஒருவர் பிடிபட்டார். மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் வேல்முருகன், 32. இவர் தற்போது காளப்பட்டியில் தனியார் சி.என்.சி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த வாரம் இவர் ஒரு செயலியில் தொடர்பு கொண்ட போது காளப்பட்டி கோயில் அருகே வரும்படி ஒருவர் ஆசை காட்டி உள்ளார்.
வேல்முருகன் அங்கு சென்ற போது அங்கிருந்த மூன்று பேர் வேல்முருகனை மிரட்டி மொபைல் மற்றும் 9,500 ரூபாயை பறித்து கொண்டு துரத்திவிட்டனர்.
வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பணம் பறிப்பில் ஈடுபட்ட சரவணம்பட்டியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 20. என்பவரை கைது செய்தனர்.