/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 28, 2024 01:19 AM

கோவை;''தமிழகத்துக்கு, மத்திய அரசு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது,'' என, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
கோவையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது.
விவசாயிகள் நலன், மகளிர் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என ஒன்பது முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டிருப்பது, அது சார்ந்த தொழிலை மேம்படுத்தும், சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், 'பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில்துறையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.