/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது
அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது
அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது
அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:18 AM
கோவை';மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, மேற்கு அண்ணாசாலை பகுதியில், வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருபவர் இந்திராகாந்தி,55.
இவரும், அங்கு உதவியாளராக பணியாற்றும் கவிப்பிரியா,28, என்பவரும் சேர்ந்து, மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்தனர். ஆனால் வேலை பெற்று தராமல் ஏமாற்றி வந்தனர்.
பாதிக்கப்பட்ட, கோவையை சேர்ந்தவர்கள், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கையில், 18 பேரிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் எஸ்.ஐ., ஆக பணியாற்றுவதாக கூறி கவிப்பிரியா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மோசடியில் தொடர்புடைய, இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி, சிவமலர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.