/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள்சிறை: சிறைக்குள் நடந்த கொலையில் தீர்ப்பு ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள்சிறை: சிறைக்குள் நடந்த கொலையில் தீர்ப்பு
ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள்சிறை: சிறைக்குள் நடந்த கொலையில் தீர்ப்பு
ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள்சிறை: சிறைக்குள் நடந்த கொலையில் தீர்ப்பு
ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள்சிறை: சிறைக்குள் நடந்த கொலையில் தீர்ப்பு
ADDED : ஜூன் 16, 2024 01:20 AM
கோவை:சிறைக்குள் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் கைதிக்கு மீண்டும் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், போத்தம்பாளையம் அருகேயுள்ள பிச்சம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் ராமசாமி,55. 2015ல் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சிவபுரியை சேர்ந்தவர் சுரேஷ்.42. இவரும் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்சிறை விதிக்கப்பட்டு, கடலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவை மத்திய சிறைக்கு சுரேஷ் மாற்றப்பட்டார்.
ராமசாமியும், சுரேசும், கோவை சிறையில், 8வது பிளாக்கில், 11வது அறையில் ஒன்றாக அடைக்கப்பட்டிருந்தனர். ஆயுள்சிறை கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், கேன்டீனில் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிட, பணம் கொடுத்து செல்வது வழக்கம்.
ராமசாமியை பார்க்க வந்த உறவினர்கள், செலவுக்கு பணம் கொடுத்து சென்றனர். ராமசாமியிடம், அடிக்கடி பணம் கேட்டு, சுரேஷ் தகராறு செய்தார்.
2019, ஜன., 9ல், சிறை அறைக்குள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போது, சுரேஷ் ஏற்கனவே, அங்கு பதுக்கி வைத்திருந்த செங்கலால், ராமசாமி தலையில் அடித்து கொலை செய்தார்.
புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, சுரேைஷ கைது செய்தனர். அவர் மீது, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சஞ்சீவ்பாஸ்கர், குற்றம் சாட்டப்பட்ட சுரேசிற்கு, ஆயுள்சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.