/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரில் மண்டை ஓட்டுடன் தி.மலைக்கு வந்த அகோரி காரில் மண்டை ஓட்டுடன் தி.மலைக்கு வந்த அகோரி
காரில் மண்டை ஓட்டுடன் தி.மலைக்கு வந்த அகோரி
காரில் மண்டை ஓட்டுடன் தி.மலைக்கு வந்த அகோரி
காரில் மண்டை ஓட்டுடன் தி.மலைக்கு வந்த அகோரி
ADDED : ஜூன் 16, 2024 01:14 AM

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று வடமாநிலத்திலிருந்து வந்த ஒரு காரின் முன் பகுதியில் சிவன் உருவம் பதித்தும், இருக்கை பகுதியில் வரிசையாக மனித மண்டை ஓடுகள் அடுக்கி வைத்த நிலையிலும் இருந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள், மாந்தீரிகம் செய்யும் மந்திரவாதிகள், திருவண்ணாமலைக்கு வந்ததாக அதிர்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை டவுன் போலீசார் சென்று பார்த்தபோது, வாரணாசி பகுதியில் இருந்து வந்த ஓர் அகோரி, மாடவீதி வழியாக நடந்து சென்றது தெரிய வந்தது.
அவரிடம் பேச்சு நடத்தி, காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, கிரிவலப்பாதையில் அவர் தங்கி இருந்த விடுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.