Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையில் கார் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்; நால்வர் கைது

சாலையில் கார் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்; நால்வர் கைது

சாலையில் கார் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்; நால்வர் கைது

சாலையில் கார் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்; நால்வர் கைது

ADDED : ஜூன் 16, 2024 01:21 AM


Google News
போத்தனூர்:ரொக்கம் இருப் பதாக கருதி, காரை வழி மறித்து கண்ணாடியை உடைத்த, ராணுவ வீரர் உட்பட நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த விளம்பர தயாரிப்பாளர் அஸ்லாம் சித்திக், 27. இரு நாட்களுக்கு முன் நண்பர்களான சார்லஸ், நித்தின் உள்ளிட்ட மூவருடன் பெங்களூருவுக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

தொடர்ந்து, 13ம் தேதி இரவு அங்கிருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், நீலம்பூர் - மதுக்கரை பை-பாஸ் சாலையில் பாலத்துறை பிரிவு அருகே கார் ஒன்று, இவர்களது காரை வழிமறித்து நின்றது.

தொடர்ந்து வந்த மேலும் இரு கார்களும், இவர்களது காரின் இருபுறத்திலும் வந்து நின்றன. அவற்றிலிருந்து இறங்கிய ஆறு பேர் கும்பல், அஸ்லாம் சித்திக்கின் காரின் முன் கண்ணாடியை கட்டையால் தாக்கினர்.

அதிர்ச்சியடைந்த அஸ்லாம் சித்திக் தனது காரை சாலையின் அருகேயுள்ள பள்ளத்தில் இறக்கினார். அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பினர்,

மதுக்கரை போலீசில் அஸ்லாம் சித்திக் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, கேரள மாநிலம், சித்தூரை சேர்ந்த டிரைவர் சிவதாஸ், 29, கூலி தொழிலாளி ரமேஷ்பாபு, 37, நல்லேபள்ளியை சேர்ந்த டிரைவர் அஜய்குமார், 24, மெட்ராஸ் ரெஜிமென்டில், 21வது பட்டாலியனில் பணிபுரியும் ராணுவ வீரர் விஷ்ணு, 28 ஆகியோரை கைது செய்தனர்.

கடந்த ஏப்., 4ல் விடு முறையில் சொந்த ஊருக்கு வந்த விஷ்ணு, மீண்டும் பணிக்கு செல்லாமல் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

விசாரணையில், அஸ்லாம் சித்திக் தனது காரில் ரொக்கம் கொண்டு வருவதாக கருதி, சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us