/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலூரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் சூலூரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சூலூரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சூலூரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சூலூரில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
ADDED : ஜூலை 17, 2024 11:49 PM

சூலூர்: சூலூர் தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று நடக்க உள்ளது.
கலெக்டரிடம் மனுக்கள் அளிக்க வருவாய்த்துறையினர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சூலூருக்கு கலெக்டர் கிராந்தி குமாரும், கருமத்தம்பட்டிக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், அரசூருக்கு கூடுதல் கலெக்டரும் வருவதால், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தூய்மை பணி தீவிரமாக நடக்கிறது. யூனியன் அலுவலகத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, தண்ணீர் தொட்டிகளுக்கு வெள்ளை அடிக்கும் பணி, அவசர, அவசரமாக நடந்தது.