/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்னுார் அருகே சிறுத்தை நடமாட்டம்? அன்னுார் அருகே சிறுத்தை நடமாட்டம்?
அன்னுார் அருகே சிறுத்தை நடமாட்டம்?
அன்னுார் அருகே சிறுத்தை நடமாட்டம்?
அன்னுார் அருகே சிறுத்தை நடமாட்டம்?
ADDED : ஜூலை 17, 2024 11:48 PM
அன்னுார் : அன்னுார் அருகே இரண்டாவது நாளாக மர்ம விலங்கு கோழிப்பண்ணையில் நாயை கடித்து குதறியது.
அன்னுார் அருகே பொன்னே கவுண்டன் புதூரில், நேற்று முன்தினம் ஒரு தோட்டத்தில் மயிலை சிறுத்தை கடித்து குதறியதாக மின்வாரிய ஊழியர் தெரிவித்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சரவணன் தலைமையில், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கால் தடத்தை ஆய்வு செய்தனர். அங்கு இரண்டு தென்னை மரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று மூலக்குரும்பபாளையம் செல்லும் ரோட்டில், சம்பத் என்பவரது கோழி பண்ணையில், நாயை, சிறுத்தை கடித்து குதறியதாக, பண்ணை ஊழியர் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறை அலுவலர்கள், கோழிப்பண்ணை பகுதியில் ஆய்வு செய்தனர். கால் தடத்தை பதிவு செய்து வன உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொன்னே கவுண்டன் புதூர் மக்கள் கூறுகையில், 'இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் இங்கு உள்ளது. வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கோழிப்பண்ணை அருகே வனத்துறையினர் ஒரு கேமரா பொருத்தினர்.
இதுகுறித்து வனச்சரகர் சரவணன் கூறுகையில், அங்கு பதிந்த கால் தடத்தை வன உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பியதில் நரி அல்லது மரநாயின் கால் தடமாக இருக்க வேண்டும். சிறுத்தையின் கால் தடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம், என்றார்.