/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 17, 2024 11:50 PM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அசுர வேகத்தில் சென்ற தனியார் பஸ்கள் மோதி இரண்டு பேர் பலியாகினர்.
அசுர வேகத்தில் வரும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அலுவலர்கள், காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள், முதலுதவி அம்சங்கள், விதிகளுக்கு புறம்பாக அதிகம் சத்தம் தரக்கூடிய ஏர் ஹாரன் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின் தனியார் பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இடையே வட்டார போக்குவாத்து அலுவலர் கணேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் பேசினர்.
அப்போது, பஸ்களில் பயணிகள் கண்களில் படும்படி வட்டார போக்குவரத்து அலுவலரின் பெயர் செல்போன் எண்ணை எழுதி வைக்க வேண்டும். பயணிகளை அதிகளவில் ஏற்ற கூடாது. ஏர் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது, என எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது 4 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.