/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோப்புகளில் மட்டும் ரோடுகள் சீரமைப்பு! பொத்தலான ரோடுகளால் வாகனங்கள் பாதிப்பு கோப்புகளில் மட்டும் ரோடுகள் சீரமைப்பு! பொத்தலான ரோடுகளால் வாகனங்கள் பாதிப்பு
கோப்புகளில் மட்டும் ரோடுகள் சீரமைப்பு! பொத்தலான ரோடுகளால் வாகனங்கள் பாதிப்பு
கோப்புகளில் மட்டும் ரோடுகள் சீரமைப்பு! பொத்தலான ரோடுகளால் வாகனங்கள் பாதிப்பு
கோப்புகளில் மட்டும் ரோடுகள் சீரமைப்பு! பொத்தலான ரோடுகளால் வாகனங்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:25 AM

கோவை;;மாநகரில், 51 சதவீதம் ரோடு பணிகள் முடிவடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரோடுகள், இன்னும் பழைய நிலையிலேயே உள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகள், பாதாள சாக்கடை பணிகள், காஸ் குழாய் பதிக்கும் பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்டம், கேபிள் பதிக்கும் பணிகளால், சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து முதற்கட்டமாக, ரூ.200 கோடி செலவில், மாநகராட்சி ரோடுகள்சீரமைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, ரோடுகளை சீரமைக்க, ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டது. 2022 - 23ம் ஆண்டில், 1,636 ரோடுகள் சீரமைக்கப்பட்டன. 2023 - 24ல், 2,108 ரோடுகள் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
இதில், 99 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், குழாய் பதிப்பு பணிகளால் ஒரு சதவீத பணிகள் நிறைவடையாமல் உள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ரூ.98.93 கோடி மதிப்பில், 192.60 கி.மீ., நீளம், 1,245 ரோடுகள், சீரமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 646 ரோடுகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாகவும், 51.07 சதவீதம் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாநகரின் பல்வேறு ரோடுகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கின்றன. பிரதான ரோடுகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
மாநகராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ரோடு போடும் பணி, நிறைவடைந்தவுடன் அங்கு கேபிள், பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்படுகிறது. மாநகராட்சி நிதி வீணாகிறது.
ரோடுகள் முறையாக போடப்படுவது குறித்து, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். விடுபட்ட ரோடு பணிகளை முடிக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைவற்கு முன், இப்பணிகளை முடிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.