/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கோவை அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கோவை அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கோவை அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கோவை அரசு கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 25, 2024 12:24 AM
கோவை;கோவை அரசு கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு நேற்று நடந்தது.
அரசு கலைக் கல்லூரியில் உள்ள இளநிலைப் பிரிவுகளின் கீழ், 23 துறைகள் உள்ளன. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 1,433 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, மே 30ம் தேதி துவங்கப்பட்ட நிலையில், ஜூன் 10 முதல் 15ம் தேதி வரை, துறை வாரியாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், 1,142 இடங்களில் (80 சதவீதம்) மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 291 காலியிடங்கள் உள்ளன.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. கலந்தாய்வின் முதல்நாளில் அறிவியல் துறை சார்ந்த இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 68 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலமாக மொத்தமாக, 515 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 மாணவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. 73 காலியிடங்கள் உள்ளன.
கலை அறிவியல் பிரிவில் வணிகவியல், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, அரசியல் அறிவியல், பி.பி.ஏ., உளவியல், புவியியல், புவி அமைப்பியல் உள்ளிட்ட துறைகளுக்கு, நாளை கலந்தாய்வு நடக்கிறது. நாளை மறுநாள் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.