/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வெரிகுட்' 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வெரிகுட்'
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வெரிகுட்'
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வெரிகுட்'
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 'வெரிகுட்'
ADDED : ஜூன் 25, 2024 12:26 AM
கோவை;கோவையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை பைலட்களுக்கு, மாதாந்திர செயல்திறன் பாராட்டு நிகழ்ச்சி, ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். அப்போது ஊழியர்கள் கூறுகையில், 'இந்த பாராட்டு விழா, எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. மேலும் சிறப்பாகச் செயல்படவும், சமூகத்திற்கு அதிக ஆர்வத்துடன் சேவை செய்யவும் ஊக்குவிக்கிறது' என்றனர்.