Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் பாதிப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் பாதிப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் பாதிப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் பாதிப்பு

ADDED : ஜூன் 03, 2024 11:20 PM


Google News
அன்னூர்:கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் ஊழியர்கள், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். பொருள் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

கோவை மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில், 790 ரேஷன் கடைகள் உள்ளன. நேற்று, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க, கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

ரேஷன் கடை ஊழியர்கள் படும் இன்னல்கள் குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ரேஷன் கடை ஊழியர்கள், 950 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டதால், பொருட்கள் விற்பனை நடைபெறவில்லை. கடையின் முன் மக்களுக்கு தெரியும்படி வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பொருட்களை வாங்க வந்து மக்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து திரும்பிச் சென்றனர்.

அரசு கோரிக்கைகளை ஏற்று பரிசீலனை செய்யவில்லை என்றால், ஜூலை மாதம், எட்டாம் தேதியிலிருந்து, தொடர் வேலை நிறுத்தம் செய்ய, மாநில சங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு மாவட்டத் தலைவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us