/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள் கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்
கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்
கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்
கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்
ADDED : ஜூன் 03, 2024 11:19 PM
சூலூர்;ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் கட்சியினர், கோவையில் ஓட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடக்கிறது. கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அரசினர் பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.
கோவை தொகுதியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதி வருவதால், அங்கிருந்து கட்சியினர் காலையில் துவங்கும் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க வருவது சிரமம் என்பதால், முதல் நாளே கோவைக்கு சென்று தங்க கட்சி தலைமை ஏற்பாடுகள் செய்துள்ளன.
இதற்காக, தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வினர் தங்கள் கட்சியினருக்கு, கோவையில் உள்ள ஓட்டல்களில் அறைகளை புக் செய்துள்ளனர்.
பல்லடம், சூலூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று மாலையே கோவை புறப்பட்டு சென்றனர். ஓட்டல் அறைகளில் தங்கியுள்ள அவர்கள், காலையில் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளனர்.