Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பராமரிப்பில்லாமல் பழுதடைந்து வரும் பவானி ஆற்று பாலம் புதிய பாலம் கட்ட திட்டம்

பராமரிப்பில்லாமல் பழுதடைந்து வரும் பவானி ஆற்று பாலம் புதிய பாலம் கட்ட திட்டம்

பராமரிப்பில்லாமல் பழுதடைந்து வரும் பவானி ஆற்று பாலம் புதிய பாலம் கட்ட திட்டம்

பராமரிப்பில்லாமல் பழுதடைந்து வரும் பவானி ஆற்று பாலம் புதிய பாலம் கட்ட திட்டம்

ADDED : ஜூன் 03, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உள்ள பவானி ஆற்று பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஊட்டி செல்லும் சாலையில், பவானி ஆற்றுக்கு நடுவே 40 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்ல இந்த ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலம் தற்போது பழுதடைந்துள்ளது.

கனரக வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறது. பவானி ஆற்று பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்பு சுவர்கள் கடும் சேதமடைந்துள்ளது.அதில் உள்ள சிமென்ட் பூச்சு விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. முறையான பராமரிப்பு இல்லாமல் பாலம் பழுதடைந்து வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'வாகனங்கள் செல்லும் போது, பாலத்தில் ஏற்படும் அதிர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலத்தின் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தின் சாலைகள், தடுப்பு சுவர் போன்றவற்றை செப்பனிட வேண்டும்'. என்றனர்.

புதிய பாலம் கட்டப்படும்


இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பவானி ஆற்றில் தற்போது உள்ள கான்கிரீட் பாலத்திற்கு அருகிலேயே புதிய ஆற்று பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் துவங்கும். பாலம் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை கண்காணிப்பில் உள்ளது'. என்றார்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us