/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேக்கு நாற்றுகள் உற்பத்தி 'விறுவிறு' தேக்கு நாற்றுகள் உற்பத்தி 'விறுவிறு'
தேக்கு நாற்றுகள் உற்பத்தி 'விறுவிறு'
தேக்கு நாற்றுகள் உற்பத்தி 'விறுவிறு'
தேக்கு நாற்றுகள் உற்பத்தி 'விறுவிறு'
ADDED : ஜூன் 07, 2024 01:13 AM
கோவை;தேக்கு நாற்றுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இதன் உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், விதையில்லா இனப்பெருக்கம் வாயிலாக, திசு வளர்ப்பு முறையில் தேக்கு மற்றும் கட்டிங் (குளோனல்) முறையில், சவுக்கு, யூகலிப்டஸ், மலை வேம்பு உட்பட நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் சாந்தி கூறியதாவது:
தேக்கு மரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திசு வளர்ப்பு முறையிலும், சவுக்கு, மலைவேம்பு, யூகலிப்டஸ் ஆகியவை குளோனல் முறையிலும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தேக்கு நாற்றுகள் சத்தீஸ்கரில் உள்ள வனத்துறைக்கு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது.
காகிதத் கூழ் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் யூகலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்கள், குளோனல் முறையில், வேர் ஊக்கிகள் வாயிலாக, 'காயர் பித்'தில் நடவு செய்து நாற்றுகளாக மாற்றப்படுகிறது. இவைகளுக்கு, குறிப்பிட்ட அளவு வெப்பநிலை, ஈரப்பதம் இருக்கும் வகையில், பனியில்லா கூடங்களில் வைக்கப்படுகிறது.
ஒரு மாதத்தில் வேர் பிடித்தவுடன், மற்றொரு கூடத்தில் வைத்து, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. திசு வளர்ப்பு முறையில் மேற்கொள்ளப்படும் தேக்கு நாற்றுகளும், கூடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, மரங்களில் எதிர்பார்க்கப்படும் தரம் பூர்த்தியாகிறது. ஒவ்வொரு நாற்றுகளுக்கு, தனித்தனி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாற்றுகள், விவசாயிகள், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.