/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநில கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டிக்கு கோவை தகுதிமாநில கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டிக்கு கோவை தகுதி
மாநில கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டிக்கு கோவை தகுதி
மாநில கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டிக்கு கோவை தகுதி
மாநில கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டிக்கு கோவை தகுதி
ADDED : ஜூன் 07, 2024 01:13 AM

கோவை;மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு கோவை மாவட்ட அணி முன்னேறியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி ஜூன், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சென்னையில் நடந்தது.
மூன்று நாள் போட்டியான இதில் கோவை மாவட்ட அணி காஞ்சிபுரம் மாவட்டத்தை எதிர்த்து விளையாடியது.
'டாஸ்' வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கம்போல் கோவை அணியின் துவக்க வீரர்கள் நதீர் மற்றும் நவீன் அபாரமான துவக்கம் அளித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தபோது, நதீர் (48) அவுட்டானார். பின்னர் அணியின் கேப்டன் ஹரி பாண்டியா நவீனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். அணி, 240 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரி பாண்டியா (60) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவன்ஸ்ரீ (39), செந்துார் (40*) அதிரடியாக விளையாடினர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நவீன் 165 ரன்கள் எடுத்து ஆவுட்டானார். கோவை அணி முதல் இன்னிங்ஸில் (90 ஓவர்கள்) ஐந்து விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்தது. காஞ்சிபுரம் அணி சார்பில் ஜானவ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய, காஞ்சிபுரம் அணி வீரர்களை கோவையின் தஷிஷ் கண்ணன் தனது சுழற்பந்து வீச்சால் மிரட்டினார். ஸ்ரீநாத் குமார் (62) மட்டும் அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்களை பறிகொடுத்தனர். காஞ்சிபுரம் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திறமையாக பந்து வீசிய தஷிஷ் கண்ணன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் கோவை அணி 216 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய கோவை அணி 40 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. அணிக்காக நவீன் (37), ஹரி பாண்டியா (90) சிறப்பாக விளையாடினர். காஞ்சிபுரம் சார்பில் ஷ்ரவின் மற்றும் ஜெயந்த் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 387 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், முதல் இன்னிங்ஸ் முன்னிலையின் அடிப்படையில் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.