/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுத்த தலைமுறைக்கு மாசில்லா பூமியை பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கு மாசில்லா பூமியை பரிசளிப்போம்
அடுத்த தலைமுறைக்கு மாசில்லா பூமியை பரிசளிப்போம்
அடுத்த தலைமுறைக்கு மாசில்லா பூமியை பரிசளிப்போம்
அடுத்த தலைமுறைக்கு மாசில்லா பூமியை பரிசளிப்போம்
ADDED : ஜூன் 07, 2024 01:13 AM
கோவை;கருமத்தம்பட்டி, பார்க் தொழில்நுட்பக் கல்லுாரியின், சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவர்கள் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த கல்லுாரியின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா, 'நீர், காற்று மற்றும் பூமியை நாம் மாசு இல்லாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டும்.
பூமியை பாதுகாப்பதே, சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்'' என்றார். கல்லுாரி வளாகத்தில் நுாறு மரக்கன்றுகள் நடப்பட்டது. கல்லுாரியின் முதல்வர் குமரேசன், பார்க் கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சதிஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.