ADDED : ஜூலை 06, 2024 08:26 PM
கோவை:கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பாண்டு ஜூலை 23ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்பு, காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி, கோவை என்ற முகவரியில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள, ஆர்வமுள்ள விவசாயிகள் இம்மையத்தை நேரில் அல்லது, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.