/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 06, 2024 08:25 PM
கோவை;பாரதியார் பல்கலையில் இணையவழி பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலை செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
பாரதியார் பல்கலை தொலைமுறைக் கல்விக் கூடம் இளநிலை மற்றும் முதுநிலை சார்ந்த பட்டப் படிப்புகளை இணையவழியில் வழங்கி வருகிறது. பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம் ஆகிய மூன்று இளநிலைப் பட்டப் படிப்புகள், எம்.ஏ. தமிழ் இலக்கியம், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம், வணிகவியல், எம்.காம், நிதி, கணக்கியல், எம்.ஏ. தொழில் வழிகாட்டுதல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. ஆகிய எட்டு முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
2024---25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இணையவழியில் நடத்தப்பெறும் பாடப் பிரிவுகள் அனைத்துக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல் தொடங்கி, கல்விக் கட்டணம், பாடம் நடத்துதல், பாடத் தரவுகள் (எழுத்து மற்றும் காணொளி) பதிவிடுதல், தேர்வு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்துச் செயல்பாடுகளும் இணையவழியிலேயே நடைபெறும்.
இணையவழி பட்டப் படிப்புகளில் சேர, மாணவர்கள் இணையவழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பாரதியார் பல்கலை தொலைமுறைக் கல்விக்கூட இணையதளத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.