Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க சல்லடை வடிகால்

பாலத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க சல்லடை வடிகால்

பாலத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க சல்லடை வடிகால்

பாலத்தின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க சல்லடை வடிகால்

ADDED : ஜூலை 06, 2024 08:26 PM


Google News
கோவை:கோவையில் மழை பெய்தால் அவிநாசி ரோடு பழைய பாலம் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, மூன்று இடங்களில், சல்லடையுடன் கூடிய வடிகால் அமைக்கப்படுகிறது.

கோவை நகர்ப்பகுதியில் மழை பெய்தால், லங்கா கார்னர், அவிநாசி ரோடு பழைய பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம், கிக்கானி பாலம் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது.

கன மழை பெய்த போது, எந்தெந்த வழித்தடங்களில் இருந்து தண்ணீர் வருகிறது என வீடியோ எடுக்கப்பட்டது. அதன்பின், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, மதிப்பீடு தயாரித்தனர். தமிழக அரசு தரப்பில் இன்னும் நிதி ஒதுக்கவில்லை.

இருப்பினும், மாநகராட்சி பொது நிதியில் சின்ன சின்ன வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன், லங்கா கார்னர் பகுதியில் தேங்கும் மழை நீர், வாலாங்குளத்துக்கு வழிந்து செல்லும் வகையில், 'கான்கிரீட் பாக்ஸ்' பதிக்கப்பட்டது.

தற்போது அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோவில் பகுதி மற்றும் நஞ்சப்பா ரோட்டில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர், சுரங்கப் பாதைக்குச் செல்லாமல் தடுத்து, மழை நீர் வடிகாலுக்கு திருப்பி விடும் வகையில், பாலத்தின் இருபுறமும் சல்லடையுடன் கூடிய வடிகால் அமைக்கப்படுகிறது. இதேபோல், புரூக் பாண்ட் ரோட்டில் இருந்த வழிந்தோடும் தண்ணீரை தடுக்க, ஒரு இடத்தில் வடிகால் அமைக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us