/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அமர்க்களமாக மாறி வருகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அமர்க்களமாக மாறி வருகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
அமர்க்களமாக மாறி வருகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
அமர்க்களமாக மாறி வருகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
அமர்க்களமாக மாறி வருகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
ADDED : ஜூன் 05, 2024 12:00 AM

கோவை;'போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அமிர்த் பாரத் திட்டப்பணிகள் விரைவில் முடியும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும், 554 ரயில்வே ஸ்டேஷன்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட எட்டு ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், கோவையில் போத்தனுார் மற்றும் வட கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் மறுசீரமைப்புகள் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், கோவையின் இரண்டாவது ரயில்வே ஸ்டேஷனாக செயல்பட இருப்பதால், இங்கு பயணிகளுக்கு பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் லிப்ட், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, ஸ்டேஷனில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அகலமான மேம்பாலம், ரயில்வே ஸ்டேஷனின் பிரதான நுழைவாயில் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், அதிக வாகனங்கள் நிறுத்தும் வகையில் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போத்தனுார் மற்றும் வட கோவை ரயில்வே ஸ்டேஷனில், அமிர்த் பாரத் திட்ட பணிகள் தொய்வில்லாமல் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடியும்' என்றார்.