Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் துவங்க வகுப்பறை பற்றாக்குறையால் சிக்கல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் துவங்க வகுப்பறை பற்றாக்குறையால் சிக்கல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் துவங்க வகுப்பறை பற்றாக்குறையால் சிக்கல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் துவங்க வகுப்பறை பற்றாக்குறையால் சிக்கல்

ADDED : ஜூன் 04, 2024 11:57 PM


Google News
கோவை;கோவை அரசு கலை கல்லுாரியில், வகுப்பறை பற்றாக்குறை நிலவுவதால், புதிய பாடப்பிரிவுகள் துவக்குவதில் தயக்கம் நிலவுவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நுாற்றாண்டு பழமையான கோவை அரசு கலை கல்லுாரியில், 23 இளநிலை பாடப்பிரிவுகள், 21 பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லுாரியில், போதிய வகுப்பறை இல்லாத சூழலில், காலை, மதியம் என இரு சுழற்சி முறையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோவை மட்டுமின்றி, தமிழகத்தில் அரசு கல்லுாரிகள் அளவில், சென்னைக்கு அடுத்தபடியாக, மாணவர்களின் விருப்ப கல்லுாரியாக கோவை அரசு கலை கல்லுாரி உள்ளது.

இக்கல்லுாரிகளில், பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன், மைக்ரோபயாலஜி, எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி மற்றும் தற்போது டிரெண்டில் உள்ள பி.எஸ்சி., ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் துவக்க, பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஆனால், போதுமான வகுப்பறை வசதிகள் இன்மையால், இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களுக்கு ஏற்ற படிப்புகள் இங்கு துவங்கப்படாமல் உள்ளன.

இக்கல்லுாரியில், புதிய படிப்புகள் துவங்கும் பட்சத்தில் ஏழை எளிய மாணவர்கள் பலர் விருப்ப பாடங்களை படிக்க இயலும்.

தன்னார்வ நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., நிதியுதவியில் வகுப்பறை கட்டிக்கொடுக்க ஆர்வம் இருப்பின் கல்லுாரி நிர்வாகத்தை அணுகலாம்.

இதுகுறித்து, கல்லுாரி நிர்வாக தரப்பில் கேட்டபோது, 'தற்போது, 25-30 வகுப்பறைகள் இருப்பின், சிக்கல்கள் ஏதும் இன்றி, ஒரே சுழற்சியில் வகுப்புகள் நடத்த முடியும். புதிய பாடங்கள் துவங்க வேண்டும் எனில், ஆய்வகங்கள், வகுப்பறைகள், அதற்கேற்ப கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

'முதுநிலையில், எம்.பி.ஏ., எ.காம்., படிப்புகள் துவங்க, கவுன்சிலில் ஆலோசித்து உள்ளோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us