/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.39 லட்சம் மோசடி பணத்தை 15 நாளில் மீட்ட போலீஸ் ரூ.39 லட்சம் மோசடி பணத்தை 15 நாளில் மீட்ட போலீஸ்
ரூ.39 லட்சம் மோசடி பணத்தை 15 நாளில் மீட்ட போலீஸ்
ரூ.39 லட்சம் மோசடி பணத்தை 15 நாளில் மீட்ட போலீஸ்
ரூ.39 லட்சம் மோசடி பணத்தை 15 நாளில் மீட்ட போலீஸ்
ADDED : ஜூன் 27, 2024 10:40 PM
கோவை : கோவை, சாய்பாபா காலனியை சேர்ந்த சந்திரசேகர்,70; எலும்பு முறிவு வைத்தியவர். கடந்த மாதம், 23ம் தேதி இவரிடம் டில்லியில் இருந்து பேசிய சுனில்குமார் மற்றும் அனில் யாதவ் ஆகியோர் 'உங்களது பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருள் உள்ளது; உங்களை விசாரிக்க வேண்டும்' என, மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து,'இருப்பு தொகையான ரூ.39 லட்சத்து, 74 ஆயிரத்து, 25 பணத்தை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; குற்றம் இல்லை என்றால் உங்களது வங்கி கணக்குக்கு பணம் திருப்பி அனுப்பப்படும்' என, தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி அவர்கள் கூறிய தொகையை சந்திரசேகர் அனுப்பி உள்ளார். ஆனால், திரும்ப பணம் கிடைக்காததால் சந்திரசேகர் கடந்த, 6ம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, 15 நாட்களில் பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் 'சபாஷ்' பெற்றுள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,'சந்திரசேகர் தொகை அனுப்பிய வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை வைத்து விசாரணை நடத்திவந்தோம்.
மோசடி நபர்கள் நான்கு வங்கி கணக்குகளுக்கு அத்தொகையை மாற்றினர்.
'நான்கு வங்கி கணக்குகளையும் முடக்கி பணத்தை மீட்டோம்' என்றனர்.