/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி அதிகரிப்பு சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி அதிகரிப்பு
சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி அதிகரிப்பு
சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி அதிகரிப்பு
சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி அதிகரிப்பு
ADDED : ஜூன் 27, 2024 10:40 PM
கோவை : சிறுவாணி அணைப்பகுதியில் நல்ல மழை பெய்துவருவதால் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து, 18.89 அடியாக நேற்று நீர் மட்டம் இருந்தது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. மழை பொய்த்ததால் இந்தாண்டு துவக்கத்தில், 26 அடியாக நீர் மட்டம் இருந்தது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த, 25ம் தேதி அடிவாரத்தில், 9 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 55 மி.மீ., மழை பதிவாக நீர் மட்டமானது, 11.32 அடியாக சற்று உயர்ந்தது. மறுநாள் அடிவாரத்தில், 60 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 120 மி.மீ., மழையும் பதிவாக நீர் மட்டமானது, 14.53 அடியாக உயர்ந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 63 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 130 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது.
ஒரே நாளில் நான்கு அடி அதிகரித்து, 18.89 அடியாக நீர் மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 6.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.