/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சிமென்ட் ஷீட்' குடியிருப்பில் திடீர் தீ விபத்து; துரிதமாக செயல்பட்ட துாய்மை பணியாளர் 'சிமென்ட் ஷீட்' குடியிருப்பில் திடீர் தீ விபத்து; துரிதமாக செயல்பட்ட துாய்மை பணியாளர்
'சிமென்ட் ஷீட்' குடியிருப்பில் திடீர் தீ விபத்து; துரிதமாக செயல்பட்ட துாய்மை பணியாளர்
'சிமென்ட் ஷீட்' குடியிருப்பில் திடீர் தீ விபத்து; துரிதமாக செயல்பட்ட துாய்மை பணியாளர்
'சிமென்ட் ஷீட்' குடியிருப்பில் திடீர் தீ விபத்து; துரிதமாக செயல்பட்ட துாய்மை பணியாளர்
ADDED : ஜூன் 27, 2024 10:41 PM

கோவை : சாய்பாபா கோவில் அருகே குடியிருப்பில் ஏற்பட்ட தீயை தமது உயிரையும் பொருட்படுத்தாது துரிதமாக அணைத்த துாய்மை பணியாளர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் அடுத்த எருக்கம்பெனி, சேர்மன் ராஜ் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் நேற்று மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் துாய்மை பணி மேற்கொண்டிருந்தனர்.
காலை, 10:00 மணிக்கு அங்குள்ள 'சிமென்ட் ஷீட்' பொருத்தப்பட்ட குடியிருப்பில் இருந்து திடீரென புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மின் கசிவு காரணமாக சிமென்ட் ஷீட் பொருத்தப்பட்டிருந்த மரம், 'பிளாஸ்டிக் டிரம்' தீ பற்றி அப்பகுதியே புகை மூட்டமாக தென்பட்டது.
அப்போது அங்கு பணியில் இருந்த துாய்மை பணியாளர் ஸ்டாலின் பிரபு அங்கு பணியில் இருந்தவர்களின் உதவியுடன் 'சிமென்ட் ஷீட்' மீது ஏறி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த மாநகராட்சி துாய்மை பணியாளர்களை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் பாராட்டினர்.