Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் 'தோழிகள் விடுதி' அரசு மகளிர் கல்லுாரியில் இடம்

கோவையில் 'தோழிகள் விடுதி' அரசு மகளிர் கல்லுாரியில் இடம்

கோவையில் 'தோழிகள் விடுதி' அரசு மகளிர் கல்லுாரியில் இடம்

கோவையில் 'தோழிகள் விடுதி' அரசு மகளிர் கல்லுாரியில் இடம்

ADDED : ஜூலை 22, 2024 11:05 PM


Google News
கோவை;கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பணிக்கு வரும் பெண்கள், தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிவதால் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு சார்ந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இந்நிலையில், சமூகநலத்துறையின் கீழ், குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு மகளிர் விடுதி மிகவும் குறைந்த வாடகையில் செயல்பட்டு வருகிறது. கோவையில், பூமார்க்கெட் பகுதியில் அரசு மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இங்கு போதிய வசதிகள் ஏதும் இல்லாத சூழலில், ரூ.5 கோடி மதிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், புதிய கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, அப்பணி நடைபெறாமல் போனது.

தற்போது, 'தோழிகள் விடுதி' கோவையில் அமைக்கப்படவுள்ளது. அதற்காக இடத்தேர்வு முடிந்து, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சமூகநலத்துறையின் கீழ் இருந்த மகளிர் விடுதி, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம், விரைவில் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா கூறுகையில், ''தோழிகள் விடுதி கோவையில் அமைக்க அரசு மகளிர் கல்லுாரியில், 50 சென்ட் இடம் தேர்வு செய்து, கருத்துரு சமர்ப்பித்துள்ளோம்.

மகளிர் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழக கட்டுப்பாட்டில் செல்லவுள்ளன. இதுகுறித்த அரசின் முழுமையான அரசாணை, விரைவில் வெளியாகும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us