/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேந்திரிய வித்யாலயா பள்ளி மண்டல தடகளப் போட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி மண்டல தடகளப் போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளி மண்டல தடகளப் போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளி மண்டல தடகளப் போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளி மண்டல தடகளப் போட்டி
ADDED : ஜூலை 22, 2024 11:04 PM

கோவை:கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பெண்களுக்கான, 3 நாள் சென்னை மண்டல தடகளப் போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது.
விழாவில், கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் பானுமதி, கோவை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் குன்னிகண்ணன், சர்வதேச தடகள பயிற்சியாளர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
14, 17, 19 வயதுக்குட்பட்டோர், என மூன்று பிரிவுகளில் நடத்தப்படும் தடகள போட்டியில் இந்த ஆண்டு, 38 பள்ளிகளில் இருந்து, 306 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், கே.வி.எஸ்., தேசிய தடகளப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
நேற்று துவங்கிய இந்த தடகள போட்டி, நாளை நிறைவடைகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.