/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எம்.பி.,யிடம் வக்கீல் சங்கம் மனு பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எம்.பி.,யிடம் வக்கீல் சங்கம் மனு
பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எம்.பி.,யிடம் வக்கீல் சங்கம் மனு
பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எம்.பி.,யிடம் வக்கீல் சங்கம் மனு
பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எம்.பி.,யிடம் வக்கீல் சங்கம் மனு
ADDED : ஜூலை 22, 2024 11:03 PM

கோவை:மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பார்லிமென்டில் குரல் கொடுக்குமாறு கோவை வக்கீல் சங்கத்தினர் எம்.பி.,யிடம் வலியுறுத்தினர்.
கோவை வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள், கோவை எம்.பி., கணபதி ராஜ்குமாரை நேற்று சந்தித்து, புதிய சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 17 பக்கம் கொண்ட மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தில், போலீசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் நேர்மையாக விசாரணை நடத்த முடியாது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் வாயிலாக, சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே சமுதாயம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற பார்லிமென்டில், கோவை மக்கள் சார்பில் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.