/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் 4ஜி, 5ஜி துவங்கக்கோரி போராட்டம் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் 4ஜி, 5ஜி துவங்கக்கோரி போராட்டம்
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் 4ஜி, 5ஜி துவங்கக்கோரி போராட்டம்
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் 4ஜி, 5ஜி துவங்கக்கோரி போராட்டம்
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் 4ஜி, 5ஜி துவங்கக்கோரி போராட்டம்
ADDED : ஜூலை 22, 2024 11:03 PM
கோவை:பி.எஸ்.என்.எல்., நெட் வொர்க்கில், 4ஜி, 5ஜி சேவையை உடனடியாக துவங்கக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் கூறியதாவது:
மற்ற தொலை தொடர்பு சேவைகளின் விலை உயர்வுக்குப் பின், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பி.எஸ்.என்.எல்., சேவைக்கு மாறி உள்ளனர். ஆனால் தற்போது வரை பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில், 4ஜி, 5ஜி சேவை வழங்கப்படாமல் உள்ளது.
நீண்டகாலப் போராட்டத்திற்கு பின், சென்னையில் உள்ள கிராமத்தில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல்., 4ஜிக்கான டவர் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர், தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு டெண்டர் விடுவதை தவிர்த்து, அரசே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.