/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆம்னி பஸ்சில் திடீர் தீ உயிர் தப்பிய பயணிகள் ஆம்னி பஸ்சில் திடீர் தீ உயிர் தப்பிய பயணிகள்
ஆம்னி பஸ்சில் திடீர் தீ உயிர் தப்பிய பயணிகள்
ஆம்னி பஸ்சில் திடீர் தீ உயிர் தப்பிய பயணிகள்
ஆம்னி பஸ்சில் திடீர் தீ உயிர் தப்பிய பயணிகள்
ADDED : ஜூலை 22, 2024 11:05 PM

கோவை:திருவண்ணாமலையில் இருந்து கோவை காந்திபுரம் நோக்கி, 30 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. காலை, 6:15 மணியளவில் அவிநாசி ரோடு, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை அருகே தனியார் ஹோட்டல் எதிரே பஸ்சின் 'டீசல் பம்ப்'பில் லேசாக தீ பற்றியுள்ளது.
புகையுடன் நாற்றம் வந்ததை பார்த்து, சுதாரித்துக் கொண்ட டிரைவர் தாசன்,36, வண்டியை நிறுத்தி உடனடியாக பயணிகளை வெளியேற்றினார். சில நொடிகளில் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
ஆனால், தீ வேகமாக பரவியதால் பஸ்சின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. டிரைவர் சுதாரித்துக்கொண்டதால் நல்ல வேலையாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
காலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிப்பும் பெரியளவில் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.